ஆர்டர் அள்ளுது.. ரூ.3000 விலை குறைப்பை பெற்ற Samsung 5ஜி போன்.. என்ன மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் லீக் ஆன வேகத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) உடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.38,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.41,999 க்கு அறிமுகமானது. ஆக ரூ.3000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது.
இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் ஷிப் செய்யப்படுகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமே 6 ஜெனரேஷன் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. You May Also Like
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ57 குறித்த லேட்டஸ்ட் லீக்: புதிதாக வெளிவந்துள்ள TENAA படங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் / லாவெண்டர் நிறத்தில் தோன்றுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ56 மாடலை போலவே இந்த புதிய மாடலும் ஒரு பழக்கமான வடிவமைப்பை தக்க வைத்திருக்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் மெலிதான மற்றும் இலகுவான பாடி உடன் வருகிறது.
அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ56 மாடலின் 7.4மிமீ ஸ்லிம் பாடி மற்றும் 198 கிராம் எடையுடன் ஒப்பிடும்போது புதிய மாடல் 6.9மிமீ தடிமன் மற்றும் 182 கிராம் எடையை கொண்டதாக உள்ளது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, TENAA-வில் சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது 6.6-இன்ச் FHD+ (1080 × 2340 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது, இது AMOLED பேனலை சுட்டிக்காட்டி, 16 மில்லியன் கலர்களை ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன்பில் பாதுகாப்புக்காக பேஸ் ரிகக்னைஷேஷன் ஆதரவுடன் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா-கோர் சிப்செட்டுடன் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வரவிருக்கும் எக்ஸினோஸ் 1680 ஆக இருக்கலாம். இது 256ஜிபி வரையிலான பில்ட்இன் ஸ்டோரேஜ் உடன் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான 12-மெகாபிக்சல் மற்றும் 5-மெகாபிக்சல் சென்சார்களை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 12-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh திறன் கொண்டதாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








