Home
Mobile

தூள் பறக்கும் SALE.. அறிமுகம் ஆன வேகத்தில் ரூ.3000 ஆபர்.. Samsung-ன் 2 புதிய 5G போன்கள்.. எந்த மாடல்?

எம்டபுள்யூசி 2025 (MWC 2025) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 நிகழ்விற்கு முன்னதாக சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) மாடல்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. கூடவே சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடல்கள் மீதான அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன விலை? என்ன சலுகை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

அறிமுகம் ஆன வேகத்தில் ரூ.3000 ஆபர்.. Samsung-ன் 2 புதிய 5G போன்கள்!

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி இந்திய விலை விவரங்கள்:
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.41,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.44,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.47,999
இது ஆஸம் கிராஃபைட், ஆஸம் லைட் கிரே மற்றும் ஆஸம் ஆலிவ் கலர்களில் வாங்க கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி இந்திய விலை விவரங்கள்:
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.32,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.35,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.38,999
இது ஆஸம் பிளாக், ஆஸம் லாவெண்டர் மற்றும் ஆஸம் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மீதான அறிமுக சலுகைகள்: அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன்களை குறிப்பிட்ட காலத்திற்கு, அந்தந்த 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விருப்பங்களின் விலையில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது.

இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் ஷிப் செய்யப்படுகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமே 6 ஜெனரேஷன் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 5G Galaxy A36 5G India Price Details Sale Offers Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X