Home
Mobile

இது போதும்.. 6 வருட Android OS அப்டேட்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதாவது தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது பன்ச் ஹோல் டிஸ்பிளே(Punch Hole Display) உடன் அறிமுகமாகும். மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன். மற்ற சாம்சங் போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இது போதும்.. புதிய Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் ஆனது 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளது.

One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இது போதும்.. புதிய Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

அதேபோல் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

photo credit: @OnLeaks, @androidheadlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 5G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X