Home
Mobile

இப்படியொரு Samsung 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பிறகு மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது FCC சான்றிதழ் தளத்தில் SM-A566E/DS என்ற மாடல் நம்பர் உடன் இந்த கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது.

எனவே கூடிய விரைவில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய சாமசங் போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இப்படியொரு Samsung 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும்.மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும். 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த சாம்சங் 5ஜி போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 5G 5G Spotted on FCC Certification: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X