மார்ச் 11 காலி.. இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளே.. AMD கிராபிக்ஸ்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1480 சிப்செட், ஏஎம்டி கிராபிக்ஸ், 50 எம்பி கேமரா போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் டிசைனில் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) போனின் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 Specifications): இந்த சாம்சங் போனில் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ எச்டிஆர் (Super AMOLED Infinity-O HDR) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் வருகிறது. ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சாம்சங் ஒன்யுஐ 6 (Samsung One UI 6) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (Ultra-wide Angle) கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் (Macro Sensor) வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ கேம் வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த பேட்டரியோடு 213 கிராம் எடை கொண்டுள்ளது. 8.2 தடிமன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் IP67 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust / Water Resistant) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏ55 போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
அதோடு ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி வருகிறது. நேவி ப்ளூ (Navy Blue), லெமன் (Lemon), லைலாக் (Lilac) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,190ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.47,700ஆக இருக்கிறது. இந்த விலை மற்றும் அம்சங்கள் ஜெர்மனியில் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டவையாகும். இதே விலை மற்றும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் 11ஆம் தேதி இந்த போன்கள் இந்தியாவில் வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications








