Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.1000 இல்ல.. ரூ.2000 இல்ல. முழுசா ரூ.14,000 விலை குறைப்பு.. பட்ஜெட்ல SAMSUNG மாடல்!

மிட்-பிரீமியம் சாம்சங் போனானது பட்ஜெட்டில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் எந்தவொரு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளும் இல்லாமலேயே நேரடியாக ரூ.14,000 விலை குறைப்பு கிடைத்தால் ஆர்டர் போட சொல்லவா வேண்டும். அப்படியான விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி ஏ55 போன் (Samsung Galaxy A55) ஆர்டருக்கு வருகிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விலை குறைப்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மிட்-பிரீமியம் மாடலாக வெளியாகியதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP67 ரேட்டிங் மற்றும் IPX4 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 30 நிமிடங்கள் வரையில் ஃபரஷ் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும். 5 நிமிடங்கள் வரையில் அனைத்து ஆங்கிள்களிலும் வாட்டர் ஸ்பிரே ரெசிஸ்டன்ட் கொடுக்கும்.

SALE பிச்சிக்குது.. ரூ.1000 இல்ல.. ரூ.2000 இல்ல. ரூ.14000 குறைப்பு!

பிரீமியம் டிசைனில் மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) கொடுக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா லேய்அவுட் கிடைக்கிறது. இந்த டிசைனில் அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue) மற்றும் அவ்சம் நேவி (Awesome Navy) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இப்போது, கேமரா, ரேம், பேட்டரி மற்றும் ஓஎஸ் போன்ற மற்ற முக்கிய பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 Specifications): இந்த சாம்சங் போனில் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி மெயின் (வைடு ஆங்கிள்) கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. சூப்பர் எச்டிஆர் (Super HDR), ஓஐஎஸ் (OIS) மற்றும் விடிஐஎஸ் (VDIS) வீடியோ ரெக்கார்டிங் டெக்னாலஜிகள் கிடைக்கின்றன. 4K ரெசொலூஷனில் ரெக்கார்ட் செய்யலாம்.

மேலும், இமேஜ் கிளிப்பர் (Image Clipper) மற்றும் யூடிலைஸ் போர்ட்ராய்டு மோட் (Utilize Portrait Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. விஷன் பூஸ்டர் (Vision Booster) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் (டாப்-எண்ட்) வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது.

சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஏ சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்திய மார்கெட்டில் அறிமுகமானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.39,999ஆக இருந்தது.

ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை ரூ.14,000 விலை குறைப்பில் கிடைப்பதாகும். அதே நேரத்தில் மார்கெட் விலையில் இருந்து நேரடியாக குறைப்பட்டிருப்பதால், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரடியாக இந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A55 With 8GB RAM Gets Price Drop Now Available Under Rs 26000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X