லேசுல விட்றாதீங்க.. ரூ.16,000 விலை குறைப்பு.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) ஸ்மார்ட்போன் இதுவரையில் கிடைக்காத விலை குறைப்பில் கிடைக்கிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற எந்தவொரு பரிவர்த்தனைகளையும் செய்யாமலேயே மார்கெட் விலையில் இருந்து ரூ.16,000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகியதால், ஓஐஎஸ் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.39,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.42,999ஆகவும் இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக 128 ஜிபி வேரியண்ட் ரூ.23,999 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.31,099 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.16,000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.11,900 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.719 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக ரூ.22,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் என்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் மற்றும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கொடுக்கப்படுகிறது.
இது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகியதால், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. கிநாக்ஸ் வால்ட் (Knox Vault) மற்றும் விஷன் பூஸ்டர் (Vision Booster) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 போனில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், IP67 ரேட்டிங் + IPX4 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 4K ரெசொலூஷன் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மேலும், 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனில் அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue) மற்றும் அவ்சம் நேவி (Awesome Navy) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








