Home
Mobile

அதிரும் மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. Exynos 1480.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது சாம்சங் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனை வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

50எம்பி கேமரா.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போனில் கூட இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எக்ஸிநோஸ் 1480 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் மற்றும் வீடியோ ஆப்ஸ்களை இந்த கேலக்ஸி ஏ55 5ஜி போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஏ55 5ஜி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ15 (Samsung Galaxy A15) ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் 6835 சிப்செட் (octa-core MediaTek 6835 chipset) வசதி சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி கேமரா.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ15. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ15 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (25W fast charging support) இதில் உள்ளது. வைஃபை, புளூடூத், ஜிபிஸ், என்எப்சி, யுஸ்பி டைப்-பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் விலை $139 (இந்திய மதிப்பில் ரூ.11,500) ஆக உள்ளது

.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A55 Specs Leaked: India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X