மார்க்கெட்டே அதிர போகுது.. இதுதான் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கன் அறிமுகம் செய்யப்பட்ட உடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.
அதாவது இந்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனின் புகைப்படம் கசிந்துள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா, பன்ஞ் ஹோல் டிசைன் (Punch-hole Design) கொண்ட டிஸ்பிளே மற்றும் பல அசத்தலான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 specifications): சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் இந்த புதிய சாம்சங் போனுக்கு Xclipse 530 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Awesome Iceblue, Awesome Lilac, and Awesome Navy நிறங்களில் இந்த போன் வெளிவரும்.
50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo courtesy: androidheadlines, gizmochina


Click it and Unblock the Notifications








