மார்க்கெட்டே மிரள போகுது.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. வருகிறது 2 சாம்சங் போன்கள்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அதாவது இந்த இரண்டு போன்களும் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 போன்களின் வடிவமைப்பு மற்றும் நிறங்கள் குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிளாக், ஒயிட், பிங்க் நிறங்களில் இந்த இந்த இரண்டு போன்களும் வெளிவரும். அதேபோல் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 போன்கள் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 specifications): எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி இரண்டு வேரிண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ55 போன் விற்பனைக்கு வரும். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 specifications): எக்ஸிநோஸ் 1380(Exynos 1380) சிப்செட் வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதேபோல் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) போன்ற அசத்தலான வசதிகளுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி (5,000mAh battery) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging support) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ35 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ55 நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications