மிரண்டு போவீங்க.. 50எம்பி கேமரா.. Exynos 1480 SoC சிப்செட்.. வருகிறது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் சாம்சங் உருவாக்கி வரும் கேலக்ஸி ஏ55 5ஜி போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மாரட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1480 (Exynos 1480 SoC) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழஙகும் இந்த எக்ஸிநோஸ் 1480 சிப்செட்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50எம்பி ரியர் கேமராவுடன் இந்த அட்டகாசமான கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இணையதளத்தில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டும் தான் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி அம்சங்கள்:6.4 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்பினிட்டி-ஓ எச்டிஆர் (Infinity-O HDR) மாடல் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில்120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.
அதோடு 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போனில் ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், 50 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint sensor) வருகிறது. அதேபோல டைப் - சி ஆடியோ (Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த சாம்சங் மாடல் பேட்டரியுடன் சேர்த்து 202 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த போன் ஆவ்சம் லைம் (Awesome Lime), ஆவ்சம் கிரோபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்சம் வயலெட் (Awesome Violet) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 ஸ்மாரட்போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications