Home
Mobile

சேல்ஸ் எகிற போகுது.. IP67 ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் AMOLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா, IP67 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேரவு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சேல்ஸ் எகிற போகுது.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A55 5G Specifications): 6.6 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட். 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அடைப்புடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.

சேல்ஸ் எகிற போகுது.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue), அவ்சம் நேவி (Awesome Navy) நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டஇ (Dual 4G VoLTE), வை-பை 801),ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A55 5G with 8GB RAM available at 44 percent discount on Amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X