Home
Mobile

இதுதான் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. கொத்தா தூக்குவீங்க..

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் கட்டவுட் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது ஆன்லைனில கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதுதான் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் இன்ஃபினிட்டி ஒ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

அதேபோல் எக்ஸிநோஸ் 1480 சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். 6.4 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி. . பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

50 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார்கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரிஉடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி. மேலும் இதில் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint sensor) வருகிறது. அதேபோல டைப் - சி ஆடியோ (Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த சாம்சங் மாடல் பேட்டரியுடன் சேர்த்து 202 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த போன் ஆவ்சம் லைம் (Awesome Lime), ஆவ்சம் கிரோபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்சம் வயலெட் (Awesome Violet) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

photo courtesy: @ONLEAKS, mysmartprice

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A55 5G photos leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X