Home
Mobile

அதிரவிடும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. புதிய சாம்சங் போன் ரெடி.. எந்த மாடல்?

வரும் மார்ச் மாதம் பல முன்னணி நிறுவனங்களின் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் தனது புதிய கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது இந்த போனின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி வரும் மார்ச் 11-ம் தேதி உலக சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைனில் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் ஐரோப்பா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும்.

அதிரவிடும் விலை.. புதிய சாம்சங் போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A55 5G specifications): 6.5-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display ) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

இந்த போனுக்கு Xclipse 530 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

Awesome Iceblue, Awesome Lilac, and Awesome Navy நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதிரவிடும் விலை.. புதிய சாம்சங் போன் ரெடி.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனுக்கு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போன் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A55 5G phone launch date leaked online: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X