அடிச்சு தூக்கும் அமேசான்.. முரட்டு ஆஃபரில் Samsung.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் நடக்கும் Amazon Prime Day Sale 2025-இல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) போனானது, அடிமட்ட விலைக்கு வந்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி மாடலுக்கு கிடைக்கும் தள்ளுபடி விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு 42 சதவீதம் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலைக்கு ஆர்டருக்கு வருகிறது. இதுபோக நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் ரூ.23,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இப்போது, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனுக்கு கிடைக்கும் பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A55 5G Specifications): இந்த சாம்சங் போனில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் கிடைக்கிறது. ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.
6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது இந்த சாம்சங் கேலக்ஸி போன். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, டிஸ்பிளே மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா என்னும் டிரிபிள் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமரா மூலம் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி பெற்று கொள்ளலாம். முன்பக்கம் 32 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் போன் கொடுக்கிறது.
சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) யுஐ மூலம் இந்த சாம்சங் போன் யுஐ கொடுக்கிறது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டஇ (Dual 4G VoLTE), வை-பை 801) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போனுக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது.
இந்திய மார்கெட்டில் அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue) அல்லது அவ்சம் நேவி (Awesome Navy) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு இந்த சாம்சங் போன் பக்கா ஆப்ஷனாகவே இருக்கிறது. ஏனென்றால், இந்த போனின் மார்கெட் விலையைவிட மிகவும் கம்மியான விலைக்கே இப்போது ஆர்டருக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








