Home
Mobile

தெறிக்குது ஆர்டர்.. முழுசா ரூ.2500 தள்ளுபடியில் சாம்சங் போன்.. 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சாம்சங் கேலக்ஸி ஏ54 (Samsung Galaxy A54) மாடலுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் முழுதாக ரூ.2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் அந்த போனின் புதிய கலர் குறித்த அப்டேட் வெளியாகி டபுள் ட்ரீட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 அம்சங்கள் (Samsung Galaxy A54 Specifications): இந்த சாம்சங் மாடல் 6.4 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்பினிட்டி-ஓ எச்டிஆர் (Infinity-O HDR) மாடல் டிஸ்பிளேவாகும்.

தெறிக்குது ஆர்டர்.. முழுசா ரூ.2500 தள்ளுபடியில் சாம்சங்.. எந்த மாடல்?

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கக்கூடியது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

அதோடு 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போனில் ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், 50 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint sensor) வருகிறது. அதேபோல டைப் - சி ஆடியோ (Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த சாம்சங் மாடல் பேட்டரியுடன் சேர்த்து 202 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த போன் ஆவ்சம் லைம் (Awesome Lime), ஆவ்சம் கிரோபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்சம் வயலெட் (Awesome Violet) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இப்போது, ஆவ்சம் வைட் (Awesome White) என்னும் புதிய கலரில் விற்பனைக்கு வர இருககிறது. இந்த கலர் பிரீமியம் லுக்கில் பின்னிப்பெடல் எடுக்கிறது. அடுத்த சில வாரத்தில் புதிய கலர் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.40,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.2500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை பெற நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 Awesome White Color Model Available in India Soon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X