கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..? ஒரே நேரத்தில் இரண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்த Samsung.!
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ54 மற்றும் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த இரண்டு போன்களும் 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இப்போது இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ54 அம்சங்கள்: இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் ஆதரவு, 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி ஏ54.

இந்த புதிய கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1380 பிராசஸர் உடன் Mali-G68 MP5 GPU ஆதரவு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா +5எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போன். மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ34 அம்சங்கள்: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-U டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1080 6nm பிராசஸர் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு உள்ளது. பின்பு இந்த போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 போன். பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ34 போன்.

புதிய போன்களின் விலை: இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ54 போனின் ஆரம்ப விலை US$ 523 (இந்திய மதிப்பில் ரூ.43,170). பின்பு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை US$ 416(இந்திய மதிப்பில் ரூ.34,345). மேலும் இந்த இரண்டு போன்களும் தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மார்ச் 16-ம் தேதி இந்த இரண்டு போன்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








