Home
Mobile

இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung 5ஜி போன்: விலையைக் கேட்டா இப்பவே வாங்க ரெடியாகிடுவீங்க!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ, ஒப்போ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் சில 5ஜி போன்களை கொண்டுவருகிறது சாம்சங் நிறுவனம்.

அதன்படி சாம்சங் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்தி கேலக்ஸி ஏ54 5ஜி எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung 5ஜி போன்.!

கேலக்ஸி ஏ54 5ஜி அம்சங்கள்

இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 1380 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீடிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது.

அசத்தலான கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung 5ஜி போன்.!

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

என்ன விலை?

5ஜி ஆதரவு, வைஃபை 6, புளூடூத் வி5.3, ஜிபிஎஸ், என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த புதிய கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung 5ஜி போன்.!

அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 5G smartphone will be launched soon at a budget price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X