புது வருடத்தில் நல்ல செய்தி சொன்ன Samsung: தரமான சிப்செட் கொண்ட 5G போன் விரைவில் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்04இ கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தது. இந்நிலையில் கேலக்ஸி ஏ54 5ஜி எனும் ஸ்மார்ட்போனை கூட அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி ஏ54 5ஜி
குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ54 5ஜி போனின் ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. மேலும் இந்த ரெண்டர்களின் படி, புதிய கேலக்ஸி ஏ54 5ஜி போன் பிளாக், பர்ப்பில், வைட் மற்றும் கிரீனிஷ் எல்லோ என நான்கு வித நிறங்களில் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட் கொண்ட Samsung 5G போன் விரைவில் அறிமுகம்.!

அதேபோல் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனை விட தனித்துவமான அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 6.4-இன்ச் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1380 பிராசஸர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ53 5ஜி
மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 12 அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் Exynos 1280 பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான சிப்செட் கொண்ட Samsung 5G போன் விரைவில் அறிமுகம்.!

RIP67-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்புடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்டது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

photo courtesy: 91mobiles

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 5G smartphone to be launched soon in four colors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X