இனி ஆர்டர் பிச்சுக்கும் பாருங்க.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. சாம்சங் 5ஜி போனுக்கு விலைகுறைப்பு..
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இந்த கேலக்ஸி ஏ54 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.38,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட ரூ.2000 விலைகுறைப்பு மூலம் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ54 5ஜி போனை ரூ.36,999 விலையில் வாங்க முடியும். மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.40,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பு மூலம் ரூ.38,999 விலையில் வாங்கலாம்.

மேலும் விலை குறைக்கப்பட்ட இந்த போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் விவிரக்குறிப்புகளை இப்போது பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A54 5G specifications): 6.4 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது கேலக்ஸி ஏ54 5ஜி போன். பின்பு 1080x2400 பிக்சல்ஸ், இன்பினிட்டி-ஓ எச்டிஆர் ஆதரவு, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன்.
குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை கொடுக்கும். 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போன் ஆனது 50 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல். பின்பு இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
P67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint sensor) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
மேலும் டைப் - சி ஆடியோ (Type-C audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் , ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








