Home
Mobile

இது வேற ரகம்.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. அட்டகாசமான 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்நிலையில் சாம்சங் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். 3C சான்றிதழ் தளத்தில் இந்த கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?

SM-A5560 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1480 சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு சிறந்த கேமிங் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் வெளிவரும்.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன். பின்பு 12ஜிபி ரேம், 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 32எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ55 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி (Samsung Galaxy A54 5G) போனின் அம்சங்களை பார்ப்போம். ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல். பின்பு இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல். பின்பு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாம்சங் போன். அதேபோல் இதில் 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

6.4 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது கேலக்ஸி ஏ54 5ஜி போன். பின்பு 1080 × 2340 பிக்சல்ஸ், இன்பினிட்டி-ஓ எச்டிஆர் ஆதரவு, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன்.

50 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.

அட்டகாசமான 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?

P67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint sensor) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் உள்ளது.

டைப் - சி ஆடியோ (Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் , ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 5G Phone Spotted on 3C Certification Site: May Launch Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X