Home
Mobile

மார்ச் 16 அன்று இரண்டு அட்டகாச 5ஜி போன்களை இறக்கிவிடும் Samsung.! முழு விவரம்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம்.

மார்ச் 16-ம் தேதி

அதாவது வரும் மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த போன்கள் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த Samsung கேலக்ஸி ஏ34 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்ச் 16 அன்று இரண்டு அட்டகாச 5ஜி போன்களை இறக்கிவிடும் Samsung.!

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

மார்ச் 16 அன்று இரண்டு அட்டகாச 5ஜி போன்களை இறக்கிவிடும் Samsung.!

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. இந்த புதிய போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 16 அன்று இரண்டு அட்டகாச 5ஜி போன்களை இறக்கிவிடும் Samsung.!

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போனுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A54 5G and Galaxy A34 5G phones will be launched in India on March 16 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X