Home
Mobile

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ53.!

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ53 தயாரிப்பு நொய்டா தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ53

சாம்சங் கேலக்ஸி ஏ53

வெளிவந்த தகவலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 பிக்சல் திர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ53

சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கம் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு கோ 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமராஅம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மேலும் 10 வாட் பாஸ்ட்

மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் ஸ்லாட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASSஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A53 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X