அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற Samsung Galaxy A Event 2022 நிகழ்வில் புதிய கேலக்ஸி ஏ53 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களும் வரும் ஏப்ரல் மாதம் துவகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸமார்ட்போனின் ஆரம்ப விலை EUR 449 (இந்திய மதிப்பில் ரூ.37,800) ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12 அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புதிய கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. IP67-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்புடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்டது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பறறிய கவலை இருக்காது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின்
எடை 189 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications