Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 91mobiles வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் மாடலை ஆஃப்லைன் ஸ்டோர்களில் குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜி

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.35,999-ஆக உள்ளது.ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.30,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டகேலக்ஸி ஏ52எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.37,499-ஆக இருந்தது, தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.32,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக அமேசான் தளத்தில் இன்னும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை. தற்போது ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அருமையாக

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும்
அருமையாக இருக்கும்.

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்பீகளுக்கு

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் +5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனி

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்திருந்தால்
இன்னும் அருமையாக இருக்கும். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான
அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Awesome Black, Awesome Violet மற்றும் Awesome Whiteநிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52s Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X