இந்த சாம்சங் மாடல் யூஸ் பண்றிங்களா?- ரேம் அப்டேட், கேமரா மேம்பாடு எல்லாம் கிடைக்குது!
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சாதனத்துக்கான அப்டேட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரையிலான விரிவாக்கத்தின் மூலம் மெய்நிகர் ரேம் அம்சத்தை இந்த சாதனம் பெற இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி
சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதற்கான புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4ஜிபி மெய்நிகர் நினைவகம் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த புதுப்பிப்பு ஆனது கேமரா மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

புதிய மேம்படுத்தல் ரேம் பிளஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்த சில காலத்திலேயே அதன் முதன் மென்பொருள் புதுப்பிப்பை பெற்றிருக்கிறது. புதிய மேம்படுத்தல் ரேம் பிளஸ் அம்சத்தையும் இணைக்கிறது. சமீப காலங்களில் ஒப்போ, விவோ, ரியல்மி மற்றும் ரெட்மி ஆகிய சாதனங்களிலும் இதேபோன்ற மெய்நிகர் ரேம் அம்சங்களை வெளியிட்டது. அதேபோல் சாம்சங் நிறுவனமும் இதுபோன்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது.

8 ஜிபி ரேம் ஆக விரிவாக்கம் செய்யலாம்
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி புதுப்பிப்பு குறித்து பார்க்கையில், கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி இந்தியாவில் ஓடிஏ அப்டேட்டை பெற்றிருக்கிறது. புதுப்பிப்பு ஃபார்ம்வேர் பதிப்பு A528BXXU1AUH9 உடன் வருகிறது. இது ரேம் ஆனது 4 ஜிபி ஆக இருக்கும் நிலையில் இது 8 ஜிபி ரேம் ஆக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு இணைப்பு மற்றும் கேமரா மேம்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

மென்பொருள் புதுப்பிப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் சாதனம் பயனர்களாக நீங்கள் இருந்தால் மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பை தற்போது பெறுவீர்கள். இதற்கான இணைப்பு இன்னும் பெறாத பயனர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன. தங்கள் சாதனத்தில் செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று மென்பொருள் புதுப்பிப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும் பின் பதிவிறக்கம் மற்றும் நிறுவதல் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். புதுப்பிப்பு தொடங்குவதற்கு முன் தங்களது சாதனம் நிலையான வைஃபை நெட்வொர்க் உடன் 50% சார்ஜ் இணைப்பை பெற்றிருக்க வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் விலை
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் சாதனத்தின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடல் ரூ.35,999 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.37,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமேஸிங் பிளாக், அமேஸிங் வைட் மற்றும் அமேஸிங் வயலட் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்
கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது அட்ரினோ 642 எல் ஜிபியு கொண்ட ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஏ52 ஹூட்டின் கீழ் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இருக்கிறது. 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி
பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனில் திரையின் கீழ் ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு இயக்கப்படுகிறது.

32 மெகாபிக்சல் செல்பி கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமராவோடு வருகிறது. கூடுதலாக 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறனோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் அதாவது டிஸ்ப்ளேவில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு வருகிறது.


Click it and Unblock the Notifications