சத்தமில்லாமல் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. பின்பு தற்போது இந்தியாவில் பல ஏ-தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது சாம்சங் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக 6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.35,999-விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜிமாடல் ரூ.37,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி6ஜிபி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடலை ரூ.30,990 விலையிலும், இதன் 8ஜிபி ரேம் வேரியண்டை ரூ.32,499-விலையிலும் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும்One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Awesome Black, Awesome Violet மற்றும் Awesome White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications