Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது.!

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். இந்நிலையில் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.38,400-விலையில் வெளிவரும். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சாதனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும். மேலும் கடந்த மாதம் இந்நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது.!

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி உள்ளது. மேலும் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது.!

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே கேமிங், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக பயன்படும். பின்பு Black மற்றும் Mint நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52s 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X