சாம்சங் கேலக்ஸி ஏ52 சிறப்பம்சங்கள் லீக்: அட்டகாச அம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 4370 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ72 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளிப்படுத்தின. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (எஃப்சிசி) தளத்தில் மாதிரி எண் எஸ்எம் ஏ526பி உடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
எஃப்சிசி பட்டியலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் முதலில் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கண்டறிந்தார்.
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் எனவும் 4370 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு விருப்பங்களில் கிடைக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் மற்றும் வைஃபை சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாறுபாடு 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் இந்திய விலைப்படி ரூ.40,700 ஆக இருக்கும் எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு உள்ளமைவு இந்திய மதிப்புப்படி ரூ.45,100 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 டெனா சான்றிதழ் இணையதளத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.46 இன்ச் டிஸ்ப்ளே, 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறைமையை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி சாதனத்தின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி எஸ்ஓசி ஆதரவுகள் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை, வயலட் மற்றும் ப்ளூ என நான்கு வண்ண விருப்பங்களிக் கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications