ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ52: இதோ வெளியான தகவல்!
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ தொடரில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ52 என பெயரிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52
சாம்சங் கேலக்ஸி ஏ52 மாடல் எண் SM-A526B உடன் வரும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஏ51 5ஜியின் வாரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கீக்பெஞ்ச் பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி 1.80GHz ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சிப்செட் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் இதில் லிட்டோ எனும் குறியீட்டு பெயர் காணப்படுகிறது. மேலும் இதில் 619 கிராபிக்ஸ் இருப்பதன் காரணமாக ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இதில் 6 ஜிபி ரேம் வசதி இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. முன்னதாக வெளியான அறிக்கையின்படி ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி
இந்த ஸ்மார்ட்போனின் முழுவிவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் விரைவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஏ51 5ஜியின் வாரிசாக கருதப்படுவதால் அதன் விவரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி: அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ51., 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ51 மாடலில் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் 15வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. சாம்சங் ஏ51 குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications