Home
Mobile

வெளியானது சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலை.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்களை வரும் மார்ச் 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் படஜெட் விலையில் வெளிவரும்.

ஜிபி ரேம்

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ரூ.26,499-விலையிலும்,6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.27,999-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ரூ.34,999-விலையிலும்,8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ72 மாடல் ரூ.37,999-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ72 டிஸ்பிளே

கேலக்ஸி ஏ72 டிஸ்பிளே

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேலக்ஸி ஏ72  கேமரா

கேலக்ஸி ஏ72 கேமரா

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி

கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ52 பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ52 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 4500 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் எனவும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இதன் 4ஜி வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 5ஜி வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பின்புற்ததில் குவாட் கேமரா அமைப்புடனும் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 5 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X