Home
Mobile

அடுத்தமாதம் இந்தியாவில் அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72!

சாம்சங் கேலக்ஸி ஏ52, சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் 4ஜி, 5ஜி ஆகிய அம்சங்களோடு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏ சீரிஸில் இரண்டு மாடல்களை அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

அடுத்தமாதம் இந்தியாவில் அறிமுகம்: சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72!

இதுகுறித்த 91 மொபைல்களின் அறிக்கையின்படி சாம்சங் கேலக்ஸி ஏ52, சாம்சங் கேலக்ஸி ஏ72 அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதாவது மார்ச் மாதம் 4ஜி, 5ஜி வகைகளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைஸ்மார்ட் பட்டியலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 4500 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் எனவும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இதன் 4ஜி வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 5ஜி வேரியண்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பின்புற்ததில் குவாட் கேமரா அமைப்புடனும் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 5 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ப்ளூ, வயலட், வைட் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் இதன் விலை தோராயமாக இந்திய மதிப்புப்படி ரூ.37,000 எனவும் இருக்கும் என கூறப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, யூஎஸ்பி டைப்சி போர்ட், 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் வரும் எனவும் கூறப்படுகிறது. இதில் 64 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா ஆகியவைகள் கொண்டிருக்கும் எனவும் முன்பக்கத்தில் 32எம்பி செல்பி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52, Galaxy A72 May Launching Next Month in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X