ஆரம்பமே சலுகையோடு: தரமான அம்சங்கள் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ72, ஏ52- விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடனும், கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே உடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ72

சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ72

சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த இரண்டு சாதனங்களும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. கேலக்ஸி ஏ72 மற்றும் கேலக்ஸி ஏ52 உடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 5ஜியையும் அறிமுகம் செய்தது இருப்பினும் கேலக்ஸி ஏ52 5ஜி தற்போதுவரை இந்தியாவுக்குள் வரவில்லை.

இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள்

இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஆகிய ஸ்மார்ட்போன்களை ஜிபி 67 சான்றளிக்கப்பட்ட தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் கட்டமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் உடன் இருக்கும் தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்ரும் கேலக்ஸி ஏ72 சாதனத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் ஆதரவு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார்கள் ஆகியவையோடு இருக்கிறது.

தனித்துவமான வண்ண விருப்பங்கள்

தனித்துவமான வண்ண விருப்பங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் நான்கு தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 விலை குறித்து பார்க்கையில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,499 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.27,999 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ72 விலை குறித்து பார்க்கையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.34,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.37999 ஆகவும் இருக்கிறது.

WhatsApp இல் வீடியோவை ஷேர் செய்யும்போது அதை எப்படி மியூட் செய்வது? ஈசி டிப்ஸ்..WhatsApp இல் வீடியோவை ஷேர் செய்யும்போது அதை எப்படி மியூட் செய்வது? ஈசி டிப்ஸ்..

இரண்டு ஸ்மார்ட்போன்களின் சலுகைகள்

இரண்டு ஸ்மார்ட்போன்களின் சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி இரண்டு மாடல்களும் சலுகைகளோடு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 ஆனது எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ72 சாதனம் சலுகைகள் குறித்து பார்க்கையில் ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜெஸ்ட் பணம் மூலமாக பரிவர்த்தனைகள் மேற்கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ72 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ52 வாங்கும்போது ரூ.2000 மற்றும் ரூ.1,500 சலுகைகள் கிடைக்கிறது. என்பிஎஃப்சி மற்றும் முக்கிய வங்கிகள் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு இஎம்ஐ சலுகைகள் மற்றும் பூஜ்ஜியம் பணம் செலுத்ததல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ52 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ52 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது இரட்டை நானோ சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமராவுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ72 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ72 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 25வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52, Galaxy A72 Launched in India With 90Hz Refresh Display: Price, Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X