எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72 அறிமுகம்!

|

சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ72 ஆகிய மூன்று மாடல்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று மாடல்களும் ஜிபி 67 சான்றளிக்கப்பட்ட தூசி நீர் எதிர்ப்பு அம்சத்துடன் வருகிறது. கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்கள் இரண்டும் குவாட் ரியர் கேமரா அமைப்பும், துளை பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72!

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது டால்பி அட்மாஸ் ஆதரவு ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், 800 நிட்ஸ் பிரகாசம், பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ72 ஆகிய மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்பு ரூ.30,200 ஆக இருக்கும் எனவும் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி விலை இந்திய மதிப்பு ரூ.37,100 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ72 விலையானது இந்திய மதிப்புப்படி ரூ.38,800 ஆக இருக்கிறது. சாம்சங்கின் மூன்று மாடல்களும் அற்புத கருப்பு, அற்பது ப்ளூ, அற்புத வயலட் மற்றும் அற்புத வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்திய வெளியீடு விவரங்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை.

எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72!

சாம்சங் கேலக்ஸி ஏ52 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இரட்டை நானோ சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆதரவு உள்ளிட்டவைகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி உள்சேமிப்புடன் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா வசதி உள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72!

சாம்சங் கேலக்ஸி ஏ52 இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 4ஜி, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும். அதோடு இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை நானோ சிம் ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் வருகிறது. 8ஜிபி ரேம் குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72!

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனானது 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இது 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. 5ஜி ஆதரவு, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியைவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ ஷூட்டர் ஆகியைவை உள்ளது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

எல்லாமே ஒஸ்தி: அட்டகாச அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி ஏ52, ஏ52 5ஜி, ஏ72!

ஸ்மார்ட்போன் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை நானோ சிம், 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256ஜிபி உள்சேமிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளுக்கு 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52, Galaxy A52 5G, Galaxy A72 Smartphones Launched With Android 11 OS: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X