சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்தது..

|

சாம்சங் நிறுவனம் அண்மையில் பல்வேறு சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகிது. இவற்றில் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஏ12, ஏ22, ஏ32, ஏ42, ஏ52, ஏ62, ஏ72, ஏ82 மற்றும் ஏ92 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியது.

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விபரம் இணையத்தில் கசிந்தது

இந்த பட்டியலில் இருந்து சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகயுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனின் SM-A526B மாடல் எண் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 619 ஜிபியு உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் வசதியுடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் இயங்குகிறது. இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிராசஸர் சியோமி எம்ஐ 10டி லைட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கீக்பென்ச் மதிப்பெண்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சிங்கிள் கோர் சோதனையில் சுமார் 298 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல், மல்டி கோர் சோதனையில் சுமார் 1001 புள்ளிகளைபெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியான லீக் தகவல்களில் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன், 64 எம்பி பிரைமரி கேமராவுடன் ஒரு அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், ஒரு மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு டெப்த் சென்சாருடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரைமரி சென்சார் தவிர மற்ற லென்ஸ் விவரங்கள் அனைத்தையும் நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52 5G Spotted on Geekbench : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X