இந்தியா: விரைவில் அறிமுகமாகும் அசதல்லான சாம்சங் கேலக்ஸி ஏ51.!
சாம்சங் நிறுவனம் அன்மையில் புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போனை வியாட்நாமில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக அந்நாட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ51 என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் இறுதியில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன இந்த கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.24,481-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி தகவல் இல்லை, தகவல் கிடைத்தும் உடனே அப்டேட் செய்கிறோம்


Click it and Unblock the Notifications