சாம்சங் கேலக்ஸி ஏ51, கேலக்ஸி ஏ21 எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இதோ!
சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான யூஐ 3.1 மற்றும் ஒன் யூஐ 3.0 புதுப்பிப்புகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஜனவரி 2020-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யூஐ 3.0 புதுப்பிப்பை பெற்றது. அதேபோல் இது தற்போது ரஷ்யாவில் ஒன் யூஐ 3.1 புதுப்பிப்பை பெறுவதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஜூன் 2020 இல் ஆண்ட்ராய்டு 10 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தென்கொரியாவில் முதல் ஓஎஸ் புதுப்பிப்பை பெறுகிறது. மேலும் இந்த வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
மறுபுறம், சாம்சங் கேலக்ஸி ஏ 21 கள் ஜூன் 2020 இல் ஆண்ட்ராய்டு 10 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது தென் கொரியாவில் அதன் முதல் பெரிய ஓஎஸ் புதுப்பிப்பைப் பெறுகிறது. இந்த வெளியீடு தொடர்பாக சாம்சங்கிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யூஐ 3.0 மற்றும் கேலக்ஸி ஏ51 ஒன் யூஐ 3.1 புதுப்பிப்பை பெறுகிறது. ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் தொகுக்கப்பட்ட பில்ட் எண் A515FXXU4EUC8 உடன் ஒரு யூஐ 3.1 புதுப்பிப்பை பெறுவதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஏப்ரல் 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இது யூஐ எண் A217NKSU5CUC7 உடனான யூஐ 3.0 புதுப்பிப்பை பெறுகிறது. அதேபோல் செட்டிங் அமைப்புக்குள் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் தேர்வுக்குள் சென்று பதிவிறக்கம் செய்யவும்.
சமீபத்தில் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500-விலைகுறைக்கப்பட்டு ரூ.24,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம். புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனும் 5000 எம்ஏஹெச் பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனின், 4 ஜிபி ரேம் விலை ரூ .15,999 என்று இருந்தது, இப்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A21s தற்பொழுது வெறும் ரூ .14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .17,499 ஆக இருந்தது. தற்போது புதிய விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த வேரியண்டின் விலை வெறும் ரூ.16,499 ஆகக் குறைக்கப்பட்டது. அதாவது இந்த புதிய விலை குறைப்பின் கீழ் இரண்டு வேரியண்ட் மாடல்களுக்கும் ரூ.1,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications