Home
Mobile

சாம்சங் ஏ51 பயனர்களுக்கு நற்செய்தி: புத்தம் புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51
ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

அதிலும் முதற்கட்டமாக ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு வருகிறது. பின்பு இந்த புதிய அப்டேட் கேலக்ஸி ஏ51 பயனர்களுக்கு முன்பைவிட சிறப்பான பிரைவசி அம்சங்கள், சாட் பபிள்கள், பேரண்டல் கண்ட்ரோல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

இதுவரை எந்த தகவலும் இல்லை

இதுவரை எந்த தகவலும் இல்லை

இந்த புதிய அப்டேட் உடன் பிப்ரவரி மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் இந்திய வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. விரைவில் இந்திய பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1080×2400 பிக்சல் தீர்மானம்

1080×2400 பிக்சல் தீர்மானம்

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080×2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸிநோஸ் 890 சிப்செட்

எக்ஸிநோஸ் 890 சிப்செட்

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 890 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் மாலி-ஜி76 எம்பி5 ஜிபியு வசதியை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்டபோன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A51 Received Android 11 with One UI 3.0 Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X