Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 அப்டேட்-ஐ சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு வழங்கி உள்ளது. இந்த புதிய அப்டேட் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ்

மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ்

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்தத சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

 இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே

இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

6ஜிபி/8ஜிபி ரேம்

6ஜிபி/8ஜிபி ரேம்

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங்

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A51 Received Android 11-based One UI 3.0 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X