8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனத்தின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியன்ட் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் கேலக்ஸி ஏ51 சாதனம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மாரட்போன் மாடலை ரூ.23,999-விலையிலும், 8ஜிபிரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ51 மாடலை ரூ.27,999-விலையிலும் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ51 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எக்ஸிநோஸ் 9611 சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டால்பி அட்மோஸ்
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

நான்கு கேமராக்கள்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் +
5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








