சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த வாரம் கிடைக்கும் புதிய அப்டேட் மூலம் புதிய ஒன் யுஐ 2.5 வெர்ஷனை பெறுவார்கள். வெளிவந்த தகவலின்படி இப்போது ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைத்துள்ளது.

இந்த அப்டேட் வரும் வாரங்களில் பிற நாடுகளுக்கும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஃபார்ம்வேர் அப்டேட் ஆனது ஸ்மார்ட்போனிற்கான அக்டோபர் 2020 செக்யூரிட்டி பேட்ச் உடன் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அப்டேட்டின் மூலம் சாம்சங் கீபோர்ட் அம்சங்கள் மற்றும் கேமரா ஆப்பில் புதிய மோட்கள் சேர்க்கப்படுகின்றன. சாம்சங்கின் வயர்லெஸ் டெக்ஸ் அம்சத்திற்குமான ஆதரவும் வரும். பின்பு இது ஒரு over the air (OTA) அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறிப்பிட்ட ஸ்மார்ட்போனிற்கான எந்தவொரு புதிய அப்டேட் மீதும் பயனர்கள் ஒரு கண் வைத்திருப்பது மிகவும் நல்லது.

அதேபோல் இந்தியாவில் கேல்கஸி ஏ51 பயனர்கள் அடுத்த வாரத்திற்குள் இந்த புதிய அப்டேட்டை பெறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அண்மையில் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 மாடலை ரூ.23,999-விலையிலும், பின்பு 8ஜிபி ரேம் ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 மாடலை ரூ.25,999-விலையிலும் வாங்கலாம். இந்த திருத்தப்பட்ட விலைகள் சாம்சங் இந்தியா இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications