Samsung: விரைவில்: இந்தியாவில் களமிறங்கும் Galaxy A51 & A71..!!

|

சாம்சங் நிறுவனம் அன்மையில் தனது புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வியாட்நாமில் அறிமுகம் செய்தது, அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பெயர் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஆகும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ51  டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ51 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்தபாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ51 மெமரி வசதி

கேலக்ஸி ஏ51 மெமரி வசதி

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

அட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சேஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே

கேலக்ஸி ஏ51  பேட்டரி

கேலக்ஸி ஏ51 பேட்டரி

இந்த கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம். புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ71 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சாம்சங் கேலக்ஸி ஏ71 - ஆண்ட்ராய்டு 10

சாம்சங் கேலக்ஸி ஏ71 - ஆண்ட்ராய்டு 10

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் வசதி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ71  பேட்டரி

கேலக்ஸி ஏ71 பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம். புதிய கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A51, Galaxy A71 to launch in India by 2nd week of Feb: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X