சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் இந்த விலைகுறைப்பு சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

தற்சமயம் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மாரட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0பை
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 10என்எம் எஸ்ஒசி சிப்செட் உடன் மாலி-ஜி17 ஆதரவும் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

4ஜிபி/6ஜிபி ரேம்
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் உள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மூன்று கேமராக்கள்
கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார்+8எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
இந்த கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவும், 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது,மேலும் வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2020 லைவ்
சாம்சங் நிறுவனம் நாளை அதன் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2020-ஐ கோலாகலமாக நிகழ்த்த உள்ளது. இந்த நிகழ்வின் போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன் மற்றும்சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரத்தின் படி நள்ளிரவு 12:30 மணி அளவில் துவங்குகிறது. இதை நேரலை காண இந்த லிங்கிற்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications