மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்!

|

சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிக் கடந்த சில வாரமாக ஏகப்பட்ட லீக்ஸ்களும், தகவல்களும் வெளியாகியது.

மலிவு விலையில் சாம்சங் கேலக்ஸி A30s | சாம்சங் கேலக்ஸி A50s அறிமுகம்!

ஒரு வழியாக சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியச் சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

4 நிறங்களில் A50s மற்றும் A30s

4 நிறங்களில் A50s மற்றும் A30s

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் சாம்சங் கேலக்ஸி A30 ஆகின ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷனாக வேறு சில மாறுபாடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் ஒயிட், ப்ரிஸம் க்ரஷ் கிரீன், மற்றும் ப்ரிஸம் க்ரஷ் வயலட் என்ற 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலைப் பட்டியல் மற்றும் விற்பனை

விலைப் பட்டியல் மற்றும் விற்பனை

சாம்சங் நிறுவனம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப் பட்டியல் மற்றும் எப்பொழுது இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவல்களை இன்னும் சாம்சங் சரியாகத் தெரிவிக்கவில்லை.

அம்பானியிடம் வேலைபார்க்க ஆசையா? ஆனால் ஜம்மு காஷ்மீர் போகனும்! திட்டம் என்ன தெரியுமா?

குறைவான விலையில் சாம்சங் கேலக்ஸி A30s

குறைவான விலையில் சாம்சங் கேலக்ஸி A30s

முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்த ஸ்கிரீன்களை விடக் குறைந்த ரெசல்யூஷன் ஸ்கிரீன்களை தற்பொழுது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A30s ஸ்மார்ட்போனில் வழங்கியுள்ளது. இதனால் இதன் விலை முன்பு அறிமுகம் சாம்சங் கேலக்ஸி A30 இன் விலையை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.!

அதிகமாகும் சாம்சங் கேலக்ஸி A50s விலை

அதிகமாகும் சாம்சங் கேலக்ஸி A50s விலை

சாம்சங் அறிமுகம் செய்து உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி A50s ஸ்மார்ட்போனில் ஹையர் ரெசல்யூசன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் இதன் விலை முன்பு அறிமுகம் செய்யப்பட்டசாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் மாடலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்

  • 6.4' இன்ச் முழு எச்.டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே
  • ஆக்டா கோர் பிராசஸர்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
  • 512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
  • 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
  • 32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
  • USB Type-C போர்ட்
  • இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 15W சார்ஜிங்
  • 4000 எம்.ஏ.எச் பேட்டரி

பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா? அதிரவிடும் பிக்பாஸ்!

சாம்சங் கேலக்ஸி A30s சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A30s சிறப்பம்சங்கள்

  • 6.4' இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
  • ஆக்டா கோர் பிராசஸர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்
  • 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
  • 512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
  • 25 மெகா பிக்சல் கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
  • 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
  • USB Type-C போர்ட்
  • இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 15W சார்ஜிங்
  • 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A50s, Galaxy A30s Launched At Affordable Pricing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more