Home
Mobile

மூன்று கேமராக்களுடன் வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி ஏ50: விமர்சனம்

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்புறம் மூன்று கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது, சியோமி,சாம்சங், எல்ஜி போன்ற முன்னனி நிறுவனங்கள். அன்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்.

மூன்று கேமராக்களுடன் வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி ஏ50: விமர்சனம்

மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும் இந்த ஸ்மார்ட்போனின் பின்பு மூன்று கேமரா வசதி மற்றும் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மற்ற ஸ்மார்ட்போன்களை விட இந்த கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். பின்பு வாட்டரி டிராப் டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.

கேலக்ஸி ஏ50

கேலக்ஸி ஏ50

விவோ வி11 ப்ரோ, போகோ எப்1 ஸ்மார்ட்போன்களை விட கண்டிப்பாக கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு மூன்று கேமராக்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து இடங்களுக்கு தகுந்தபடி மிக அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அருமையாக எடுக்க முடியும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விலை

விலை

4ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது.


விலைக்கு தகுந்தபடி கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் மிக அருமையாக உள்ளது என்று தான்
கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A50 Review: Premium design, triple cameras are the key highlights : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X