சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.0 அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட் உடன் மார்ச் security patch வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
கடந்த 2019-ம் வரும் செப்டம்பர் மாதம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த புதிய அப்டேட் கேலக்ஸி ஏ50 பயனர்களுக்குபுதிய அனுபவத்தை கொடுக்கும்.

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் செட்டிங்ஸ் உள்ளேசென்று சாப்ட்வேர் புதுப்பிப்புக்குள் நுழைந்து இந்தஅப்டேட் பெறலாம்.

6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்

4000எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications