இரண்டு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ50 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களையும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ50
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ரூ.22,990-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொண்ட கேலக்ஸி ஏ50 மாடல் ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்த மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ70
கடந்த வருடம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.28,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,990-விலையிலும், அமேசான் தளத்தில் ரூ.24,990-விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ70 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ70 கேமரா
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








