Home
Mobile

நோக்கியாவிற்கு பதிலடி தருமா சாம்சங் ஏ(2017) தொடர் கருவிகள்.?!

சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் ஏ7 - இந்தியாவில் அறிமுகம். என்ன விலை.? என்னென்ன சிறப்பம்சங்கள்.?

By Muthuraj

இன்று (திங்களன்று) சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ5 (2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஆகிய கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இக்கருவிகள் ரஷ்யாவில் நடைபெற்ற சிஇஎஸ் 2017 நிகழ்வையொட்டி இந்த ஸ்மார்ட்போன்களை தொடங்கியது. பிளாக் ஸ்கை மற்றும் கோல்ட் சாண்ட் ஆகிய வண்ண வகைகளிலுமே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் கிடைக்கிறது.

விற்பனைக்கு கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஆகிய கருவிகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? விலை நிர்ணயமா என்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

முன்பதிவு

முன்பதிவு

வெளியாகியுள்ள இரு மாதிரிகளுமே நாட்டில் மார்ச் 15-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. உடன் இன்று தொடங்கி சாம்சங் இ ஸ்டோர் வழியாக இக்கருவிகளை முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

"மேம்பட்ட" கேமராக்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ5 2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) கருவியின் சிறப்பம்சமாக கேலக்ஸி எஸ்7, பாணி வடிவமைப்பு, அதன் குறைந்த ஒளி தேர்வுமுறை ( low-light optimisation) கொண்ட "மேம்பட்ட" கேமராக்கள் மற்றும் புட் மோட் கொண்ட ஒரு எளிமைப்படுத்தப்பட்ட கேமரா யூஎக்ஸ் ஆகியவைகளை சுட்டிக்காட்டலாம்.

மெமரி

மெமரி

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ தொடர் ஸ்மார்ட்போன்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்ட ஐபி68-மதிப்பீடு கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் விலை பிரிவு கருவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ5 (2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஆகிய இரண்டு கருவிகளுமே மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்குகிறது மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பும் கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

ஹோம் பொத்தானில் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள இக்கருவி டைப் சி யூஎஸ்பி போர்ட் கொண்ட ஸ்மார்ட்போன்களாகும் உடன் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக், சாம்சங் பே ஆப் ஆதரவு, அதே போல் சாம்சங் க்ளவுட் மற்றும் செக்யூர் போல்டர் போன்ற இதர அம்சங்களையும் கொண்டுள்ளது.

இரட்டை சிம் ஆதரவு

இரட்டை சிம் ஆதரவு

வெளியான இரண்டு கேலக்ஸி ஏ (2017) தொடர் ஸ்மார்ட்போன்களும் இரட்டை சிம் ஆதரவு கொண்ட கருவியாகும் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது. 4ஜி (எல்டிஇ கேட் 6), வோல்ட் ஆதரவு, சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே என இரண்டு கருவிகளுக்கும் இடையே நிறைய பொதுவான அம்சங்கள் உள்ளன.

கேமரா

கேமரா

வைஃபை, ப்ளூடூத் வி4.2 மற்றும் என்எப்சி போன்ற பிற இணைப்பு விருப்பங்களும் கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 3ஜிபி ரேம் இணைந்த ஒரு 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டாகோர் எஸ்ஓசி மற்றும் எல்இடி ப்ளாஷ் மற்றும் ஒரு எப்/1.9 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

இரண்டு கருவிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்று பார்த்தல் சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) 5.2 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) சூப்பர் அமோஎல்இடி, அளவீட்டில் 146.1x71.4x7.9மிமீ மற்றும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது மறுபுறம் சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017) ஒரு 5.7-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளேவும், அளவீட்டில் 156.8x77.6x7.9மிமீ மற்றும் ஒரு 3600எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) கருவியானது ரூ.28,990/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மறுபக்கம் சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017) கருவியானது ரூ.33,490/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது .

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆப்பிள், சாம்சங் ஓரம்போ.. வருகிறது நோக்கியா பி1 (விலை, அம்சங்கள்).!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A5 (2017), Galaxy A7 (2017) With 4G VoLTE Support, IP68 Rating Launched in India. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X