தரப்படுத்தல் வலைத்தளத்தில் சிக்கிய சாம்சங் ஏ5 (2018) ஸ்மார்ட்போன் (அம்சங்கள்).!
நிறுவனத்தின் விர்ச்சுவல் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆனது அதன் நடுத்தரத் தொலைபேசி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏ3 (2018), கேலக்ஸி ஏ5 (2018), மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய கருவிகளில் இடம்பெறும்.
சாம்சங் கேலக்ஸி ஏ (2018) தொடர் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தென் கொரிய நிறுவனமான சாம்சங், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் புதிய சாதனங்களைத் தொடங்கும் என்பது போல் தெரிகிறது.

இதற்கு முன்னதாக கசிந்த தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ (2018) ஸ்மார்ட்போன்கள் தொடரானது பிரத்யேகமான பிக்ஸ்பை (Bixby) பொத்தானைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆக, நிறுவனத்தின் இந்த விர்ச்சுவல் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆனது அதன் நடுத்தரத் தொலைபேசி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏ3 (2018), கேலக்ஸி ஏ5 (2018), மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய கருவிகளில் இடம்பெறும் என்றும், இந்த வரிசையில் பிக்ஸ்பை அம்சம் கொண்டு வெளியாகும் முதல் சாதனமாக புதிய கேலக்ஸி ஏ (2018) இருக்கும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல்
பிக்ஸ்பை அம்சம் சார்ந்த உறுதிப்படுத்தல்களை எதிர்நோக்கும் தருணத்தில், இப்போது கேலக்ஸி ஏ (2018) தொடர் கைபேசி தொடர்பாக இன்னொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் கீழ், கூறப்படும் கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பு வெளியாகியுள்ளது.

உறுதி
மாடல் எண் எஸ்எம்-ஏ530எப் என்ற பெயரின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) சாதனமாக இருக்கலாமென முதலில் கருதபட்டது, பின்னர் அதன் அம்சங்களை வைத்து அது நிச்சயமாக ஒரு கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போன் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய எக்ஸிநோஸ் 7885 செயலி
வெளியான கீக்பெஞ்ச் பட்டியலின் படி, கேலக்ஸி ஏ5 (2018) ஆனது 1.59 ஜிகாஹெர்ட்ஸ் உடனான சாம்சங் நிறுவனத்தின் புதிய எக்ஸிநோஸ் 7885 செயலி மூலம் இயக்கப்படும் மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படும் என்பது போல் தெரிகிறது. கேலக்ஸி ஏ5 (2017) ஆனது 3ஜிபி ரேம் கொண்டுள்ளதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ
மேலும் பட்டியலின் படி, இந்த கைபேசி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும். இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு அதன் ஸ்மார்ட்போன்களை தொடங்குமா அல்லது தவிர்க்குமா என்பதை காண முடியும்.

இன்பினிட்டி டிஸ்பிளே
கீக்பெஞ்ச் பட்டியலின் கீழ் இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள் இவ்வளவுதான் உள்ளது. முன்னர் வெளியான தகவல்கள் இந்த எதிர்கால சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஆனது இன்பினிட்டி டிஸ்பிளே, கைரேகை ஸ்கேனர், மற்றும் நீர் எதிர்ப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் வரும் என்று தெரிவித்துள்ளனர்.

கேலக்ஸி ஏ (2018) தொடர்
மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களும், கேலக்ஸி ஏ (2018) தொடர்வரிசையில் இடம்பெறலாம். தவிர வரவிருக்கும் வாரங்களில் இந்த சாஸ்மாங் தொடர் பற்றிய நிறைய லீக்ஸ் தகவல்களை நாங்கள் அதிகம் கேட்கப்பெறுவோம்; உங்களுடன் பகிர்ந்தும் கொள்வோம்.


Click it and Unblock the Notifications