அவசரம் வேண்டாம் கொஞ்சம் பொறுங்கள், கேலக்ஸி ஏ (2018) தொடர் வெளியாகிறது.!
கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய ஸ்மார்ட்போம்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரட்டை செல்பீ கேமராக்கள் இருப்பதாக தோன்றுகிறது.!
ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை ஒதுக்கி வைத்துவிட்டு என்ன ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பவரா நீங்கள்.? கொஞ்சம் பொறுங்கள், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ (2018) தொடர் ஸ்மார்ட்போன்கள் சில அட்டகாசமான அம்சங்களுடன் வெளியாகவுள்ளது. அவைகள் என்னென்ன அம்சங்கள் என்பதை ஒருமுறை பார்த்து விடலாமே.!

சாம்சங் அதன் அடுத்த தலைமுறை ஏ தொடர் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியான வண்ணம் இருக்க தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018).!
இம்முறையும் @OnLeaks மற்றும் MySmartPrice கூட்டணி தான் வரவிருக்கும் கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) கருவிகளின் 3டி மாதிரிகளை உருவாகியுள்ளது.

உயரமானவை மற்றும் குறுகலானவை.!
வீடியோவிலிருந்து இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இருக்கும் மாடல்களை விட உயரமானவை மற்றும் குறுகலானவை என்பதை அறிய முடிகிறது மற்றும் இதன் திரைகள் குறுகியதாக மற்றும் இன்னும் செங்குத்தான இடைவெளியும் கொண்டிருக்கும்.

இரட்டை செல்பீ கேமராக்கள்.!
மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் தான். ஆம் நீங்கள் கணித்தது சரிதான் - கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய ஸ்மார்ட்போம்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரட்டை செல்பீ கேமராக்கள் இருப்பதாக தோன்றுகிறது.

செல்பீகளுக்கான முக்கியத்துவம்.!
இந்த உண்மை என்றால் இவைகள் தான் முன்பக்கம் இரட்டை கேமராக்கள் இடம்பெறும் முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்களாக இருக்கும். மேலும் இதிலிருந்து 2018-ஆம் ஆண்டு வெளியாகும் சாம்சங் கருவிகள் செல்பீகளுக்கான முக்கியத்துவம் கொண்டு வரும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+.!
மறுகையில், சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் இரட்டை கேமராக்களை செயல்படுத்த விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது. ஆக, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இரட்டை பின்புற கேமராக்கள் கொண்டு கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி.!
அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆனது சொந்த தயாரிப்பான எக்ஸிநோஸ் 7885 எஸ்ஓசி (10என்எம்) அல்லது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி அடிப்படையில் இயங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிட்டி டிஸ்பிளே பேனல்கள்.!
மேலும் இந்த வரவிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் ஐபி68 தரவரிசையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இது வாட்டர் ப்ரூப் அம்சத்தை வழங்கும். எல்லாவற்றிக்கும் மேலாக வெளியான கான்செப்ட் வீடியோவில் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ ஸ்மார்ட்போன்களில் இருப்பதுபோன்ற இன்பினிட்டி டிஸ்பிளே பேனல்கள் இடம்பெறுகின்றன.
வீடியோ :
வெளியான கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) வீடியோ.!


Click it and Unblock the Notifications